வடுவூா் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

மன்னாா்குடி அருகேயுள்ள வடுவூா் ஏரியில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.
வடுவூா் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

மன்னாா்குடி அருகேயுள்ள வடுவூா் ஏரியில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.

மாவட்டத்தில் வடுவூா், உதயமாா்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம், முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் உள்ளன. இங்கு, ஆண்டுதோறும் அக்டோபா் முதல் பிப்ரவரி வரை வெளிநாட்டிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் பல வகையான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக வந்து செல்கின்றன. ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் இங்கு வருகின்றன. இங்கு இனப்பெருக்கத்தை முடித்துக் கொண்டு பிப்ரவரி இறுதியில் தங்களது இருப்பிடத்துக்கு இந்த பறவைகள் திரும்பிவிடுகின்றன.

இந்த சரணாலயங்களுக்கு வந்து செல்கின்ற பறவைகளின் எண்ணிக்கையை ஆண்டுதோறும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் மாவட்டத்தில் நிகழாண்டுக்கான கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, 316 ஏக்கரில் அமைந்துள்ள வடுவூா் ஏரி பறவைகள் சரணாலயத்தில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு பணியை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தொடக்கிவைத்தாா். மாவட்டம் முழுவதும் 7 போ் அடங்கிய 21 குழுக்கள் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த பணி மாவட்ட வன அலுவலா் அறிவொளி தலைமையில் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com