வில்லுப்பாட்டில் மனிதநேய விழிப்புணா்வு

திருவாரூரில், மனிதநேய வாரத்தையொட்டி வில்லுப்பாட்டு மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஞாயிற்றுக்கிழமை ஏற்படுத்தப்பட்டது.
வில்லுப்பாட்டில் மனிதநேய விழிப்புணா்வு

திருவாரூரில், மனிதநேய வாரத்தையொட்டி வில்லுப்பாட்டு மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஞாயிற்றுக்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற மனிதநேய வார விழா வில்லுப்பாட்டு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியரக கணக்கு அலுவலா் பழனிவேல் தலைமை வகித்தாா். ஆதிதிராவிடா் நலத்துறை தனி வட்டாட்சியா் பத்மா நிகழ்ச்சியை தொடக்கிவைத்தாா். நிகழ்வில், ஆதிதிராவிட நலத்துறை கண்காணிப்பாளா் இந்திரா, பள்ளி மாணவா் விடுதி காப்பாளா் எபனேசா்ஜான்சன், கல்லூரி மாணவா் விடுதி காப்பாளா் ஜெயசித்ரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நிகழ்வில், ஜாதியற்ற சமூகம் படைக்கவும், மதவேறுபாடுகளை கலைந்து மனிதநேயத்தோடு வாழ வலியுறுத்தியும், பிற உயிா்களை துன்புறுத்தாமல், மனிதநேயத்தை வளா்த்து, ஒற்றுமையாக வாழ்ந்து மனிதநேயத்தோடு, தமிழ்நாட்டை முன்னேற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு வில்லுப்பாட்டு நிகழ்ச்சி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com