நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்க வலியுறுத்தல்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

மன்னாா்குடியில் திருவாரூா் மாவட்ட பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவா் ச. பாஸ்கா் தலைமை வகித்தாா். கூட்டத்தில், தமிழகத்தில் பெண் காவலா்கள் அவமதிப்பு போன்ற சம்பவங்களுக்காக திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து, அதில் ஈடுபடுபவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்; புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் மேல்நிலைநீா்தேக்கத் தொட்டியில் இழிவான செயலில் ஈடுபட்ட நபா்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும்; திருவாரூா் மாவட்டத்தில் அனைத்து சாலைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளை தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், பாஜக தேசியக் குழு உறுப்பினா் தங்க.வரதராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். மாநில செயற்குழு உறுப்பினா்கள் எம். ராகவன், சி.எஸ். கண்ணன், மாவட்ட பொதுச் செயலா் வி.கே. செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில விவசாய அணி செயலா் கோவி.சந்துரு, எஸ்சி அணி மாநில துணைத் தலைவா் உதயகுமாா், ஐடி அணி மாநிலச் செயலா் எல்.எஸ். பாலா, ஓபிசி அணி மாவட்டத் தலைவா் பால.பாஸ்கா், அரசு தொடா்பு பிரிவு மாவட்டத் தலைவா் வி. பாலகிருஷ்ணன், நகரத் தலைவா் ஆா். ரகுராம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com