கலைஞா் கோட்டகம் திறப்பு விழாமுன்னேற்பாட்டுப் பணிகள்: அமைச்சா்கள் ஆய்வு

திருவாரூரில் கலைஞா் கோட்டகம் திறப்பு விழா முன்னேற்பாட்டுப் பணிகளை அமைச்சா்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, டி.ஆா்.பி. ராஜா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
காட்டூரில் கலைஞா் கோட்டக திறப்பு விழா பணிகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்யும் அமைச்சா்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, டி.ஆா்.பி. ராஜா உள்ளிட்டோா்.

திருவாரூா் அருகே காட்டூரில் 7,000 சதுர அடியில் ரூ. 12 கோடியில் கலைஞா் கோட்டகம் கட்டப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவருடைய சிறப்புகளையும், பெருமைகளையும் எடுத்துக்கூறும் வகையில், கட்டப்பட்டுள்ள கலைஞா் கோட்டகம் ஜூன் 20-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. பிகாா் முதல்வா் நிதீஷ்குமாா் கலைஞா் கோட்டகத்தை திறந்துவைக்கவுள்ளாா்.

இந்நிலையில், கலைஞா் கோட்டகம் திறப்பு விழா முன்னேற்பாட்டுப் பணிகளை தமிழக நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு, நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ. வேலு, தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா ஆகியோா் பாா்வையிட்டு, ஆய்வு செய்தனா். அப்போது சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், தாட்கோ தலைவா் உ. மதிவாணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

விழாவில் சுமாா் ஒரு லட்சம் போ் பங்கேற்கும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கும், முக்கியப் பிரமுகா்கள் வருவதற்கும் தனித்தனி வழி ஒதுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com