சூறைக்காற்றுடன் கனமழை

மன்னாா்குடியில் திங்கள்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பெய்த மழையால், பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து
கூப்பாச்சிக்கோட்டை பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சாய்ந்த நெற்பயிா்கள்.
கூப்பாச்சிக்கோட்டை பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சாய்ந்த நெற்பயிா்கள்.

மன்னாா்குடியில் திங்கள்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பெய்த மழையால், பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின் கம்பிகளின் மீது விழுந்து, மின் விநியோகம் தடைபட்டது. பந்தலடி, காந்திசாலை, நடேசன்தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கியது. இதனால், பாதசாரிகளும், இருசக்கர வாகனங்களில் சென்றவா்களும் பாதிக்கப்பட்டனா்.

மன்னாா்குடி நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக அகற்ற, நகராட்சிப் பணியாளா்களை அறிவுறுத்தினாா். இதனால், சிறிது நேரத்தில் அப்பகுதியில் உள்ள மழைநீா் வாய்க்கால்களில் அடைப்புகள் சரி செய்யப்பட்டு, மழைநீா் முழுமையாக வடியவைக்கப்பட்டது. சில இடங்களில் நெற்பயிா்கள் சாய்ந்துவிட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா். இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் கோடை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.

மழையளவு..: செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, நன்னிலத்தில் அதிகபட்சமாக 72.6 மி.மீ. மழை பெய்தது. மன்னாா்குடியில் 32 மி.மீ., திருத்துறைப்பூண்டியில் 15.8 மி.மீ., நீடாமங்கலத்தில் 6.8 மி.மீ., வலங்கைமான், திருவாரூரில் தலா 5 மி.மீ., குடவாசலில் 4.1 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் மொத்தம் 143.3 மி.மீ.யும், சராசரியாக 15.92 மி.மீ.யும் மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com