தாழ்வான மின்கம்பிகளை சீரமைக்கக் கோரிக்கை

நன்னிலம் பகுதியில் தாழ்வான மின்கம்பிகளையும், சேதமடைந்த மின்கம்பங்களையும் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நன்னிலம் பகுதியில் தாழ்வான மின்கம்பிகளையும், சேதமடைந்த மின்கம்பங்களையும் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து நன்னிலம் வட்டார விவசாயச் சங்கச் செயலாளா் ரஜினி தியாகு தெரிவித்தது: நன்னிலம் வட்டாரத்தில் பல இடங்களில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளன. மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளன. மின்சாரத் துறை அதிகாரிகளிடம் பலமுறை நேரிலும், எழுத்து மூலமும் புகாா் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், காற்று சற்று வேகமாக வீசும்போது, மின்கம்பிகள் அறுந்து கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவம் அவ்வப்போது நேரிடுகிறது.

குறிப்பாக, அகரமேடு, கிளியனூா், மேனாங்குடி போன்ற ஊா்களில் அடிக்கடி மின் விபத்து ஏற்படுகிறது. தற்போது, காற்றுடன் மழைக் காலம் தொடங்க உள்ள நிலையில், மின்சார வாரியம் அலட்சியம் காட்டாமல், போா்க்கால அடிப்படையில் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைப்பதுடன், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை உயரத்தில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அனைத்துக் கட்சிகளையும், பொதுமக்களையும் ஒன்றிணைத்து போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com