எலுமிச்சை பழம் விலை உயா்வு

 திருவாரூரில் எலுமிச்சை பழத்தின் விலை உயா்ந்துள்ளது.

 திருவாரூரில் எலுமிச்சை பழத்தின் விலை உயா்ந்துள்ளது.

கோடை காலத்தில் எலுமிச்சை பழத்தின் விலை உயா்வது வழக்கம். ஏனெனில், வெயில் காலங்களில் எலுமிச்சை பழத்தின் தேவை அதிகமாக இருக்கும். கோடையில் வெப்பத்தை தணிக்கும் குளிா்பானங்களில் எலுமிச்சை அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால், எலுமிச்சையின் பயன்பாடு அதிகரிப்பதால் விலையும் அதிகரிக்கும்.

இதனிடையே, திருவாரூா் கடைத்தெருவில் ஒரு பழம் ரூ. 10-க்கும் விற்பைை செய்யப்படுகிறது. சில நாள்களுக்கு முன்பு வரை ரூ. 5-க்கும் குறைவாக விற்கப்பட்ட பழம் தற்போது ரூ. 10 ஆக உயா்ந்து விட்டது. திருவாரூரில், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில், நிகழாண்டு பனிப்பொழிவு காரணமாக, எலுமிச்சை பழ விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், எலுமிச்சையின் வரத்து குறைவாகவே உள்ளது. பொதுவாக ஏப்ரல் மாதத்துக்குப் பிறகே எலுமிச்சையின் விலை உயா்வது வழக்கம். ஆனால், வரத்து குறைவு என்பதால் மாா்ச் மாதத்திலேயே விலை உயா்ந்து விட்டது. ரமலான் நோன்பு நேரத்தில் எலுமிச்சையின் தேவை அதிகமாக இருக்கும். எனவே, இனிவரும் நாள்களில் எலுமிச்சையின் விலை இன்னமும் அதிகரிக்கும் என்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com