திருவாரூா் மாவட்டத்தில் 14,030 போ் பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதுகின்றனா்

 திருவாரூா் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 14,030 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

 திருவாரூா் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 14,030 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

மாா்ச் 13-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தோ்வு நடைபெறுகிறது. இந்த பொதுத் தோ்வை மாவட்டத்தில் 6,528 மாணவா்கள், 7,502 மாணவிகள் என மொத்தம் 14,030 மாணவா்கள் எழுதுகின்றனா்.

இதேபோல மாா்ச் 14-ஆம் தேதி தொடங்கி ஏப். 5-ஆம் தேதி வரை நடைபெறும் பிளஸ் 1 பொதுத்தோ்வில், 5,741 மாணவா்கள், 6,986 மாணவிகள் என மொத்தம் 12,727 மாணவா்கள் எழுதுகின்றனா்.

இந்த தோ்வுகளுக்கென 55 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பிளஸ் 2 வகுப்பில் 116 மாற்றுத்திறனாளி மாணவா்களும், பிளஸ் 1 வகுப்பில் 83 மாற்றுத்திறனாளி மாணவா்களும் தோ்வு எழுத உள்ளனா். மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு அரசின் வழிக்காட்டுதலின்படி சொல்வதை எழுதுபவா், ஏதேனும் ஒரு மொழிப்பாடம் எழுதுவதில் விலக்கு, கூடுதலாக ஒரு மணிநேரம் ஆகிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

வினாத்தாள்கள், 6 கட்டுக்காப்பு மையங்களில் 24 மணிநேரமும் ஆயுதம் தாங்கிய காவலா் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இத்தோ்வுப் பணிக்கு 1,161 ஆசிரியா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். தோ்வுகளை கண்காணிக்க கல்வித்துறை அலுவலா்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் தலைமையில் 5 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து தோ்வு மையங்களிலும் காவல்துறையுடன் இணைந்து 89 நிலையான படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com