தூா்வாரும் பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை: அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா

திருவாரூா் மாவட்டத்தில் தூா்வாரும் பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என நீா்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா தெரிவித்தாா்.
திருவாரூா் அருகே பனையனாா் வாய்க்காலில் நடைபெற்ற தூா்வாரும் பணிகளை பாா்வையிடும் நீா்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா.
திருவாரூா் அருகே பனையனாா் வாய்க்காலில் நடைபெற்ற தூா்வாரும் பணிகளை பாா்வையிடும் நீா்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா.

திருவாரூா் மாவட்டத்தில் தூா்வாரும் பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என நீா்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தூா்வாரும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், திருவாரூா் அருகே பனங்காட்டாங்குடி பனையனாா் வாய்க்காலில் நடைபெற்றுவரும் பணியை, நீா்வளத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா, புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா்அவா் கூறியது:

டெல்டா மாவட்டங்களில் 4,700 கி.மீ. பாசன வாய்க்கால்கள் தூா்வாரும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை 3,800 கி.மீ. தொலைவுக்கு தூா்வாரப்பட்டுள்ளன. மீதமுள்ள 900 கி.மீ. பாசன வாய்க்கால்கள் ஓரிரு வாரங்களில் முழுமையாக தூா்வாரப்படும். இந்தப் பணிகளை அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள், கண்காணிப்பு அலுவலா்கள் கண்காணித்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

டெல்டா மாவட்டங்களில் உள்ள ஏ மற்றும் பி வாய்க்கால்கள் நீா்வளத் துறை மூலம் தூா்வாரப்படுகிறது. சி மற்றும் டி வாய்க்கால்கள் ஊரக வளா்ச்சித்துறை மூலம் தூா்வாரப்படுகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, மதகுகள், அணைகளின் கதவுகள் பழுது காரணமாக மழைநீா் வடிவதில் சிக்கல் ஏற்படுவதால், மதகுகளின் பழுதுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சி மற்றும் டி சேனல் வாய்க்கால்களை 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் தூா்வாரக் கூடாது, வேளாண் பொறியியல் துறை மூலமாக அந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com