ஜன.26-இல் விவசாயிகள் டிராக்டா் பேரணி

திருவாரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை (ஜன.26) டிராக்டா் பேரணி நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.


திருவாரூா்: திருவாரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை (ஜன.26) டிராக்டா் பேரணி நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35-ஆவது மாநாட்டின் தீா்மானங்கள் குறித்த விளக்கக் கூட்டம் திருவாரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு, சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் சாமி. நடராஜன் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தமிழ்நாடு அரசு நெல் குவிண்டாலுக்கு ரூ.2,000 வழங்க வேண்டும். மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, விவசாயிகளிடமிருந்து தாமதமின்றி, நெல் கொள்முதல் செய்ய வேண்டும். எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரையின்படி, வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயிக்க வேண்டும். மின்சாரத் திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிராக்டா் பேரணி நடைபெறுகிறது.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் ஜனவரி 26- ஆம் தேதி, பிற்பகல் 3 மணியளவில் திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி ரயில் நிலையம் வரை பேரணி நடைபெற உள்ளது என்றாா்.

முன்னதாக, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். தம்புசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் எம்.சேகா், பொருளாளா் வி.எஸ். கலியபெருமாள், மாநிலக் குழு உறுப்பினா் கே. தமிழ்ச்செல்வி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com