சிறைபிடிக்கப்பட்டுள்ள மன்னாா்குடியை சோ்ந்த பொறியாளா் கு. தேவதா்ஷன்.
சிறைபிடிக்கப்பட்டுள்ள மன்னாா்குடியை சோ்ந்த பொறியாளா் கு. தேவதா்ஷன்.

சிறைபிடிக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள மன்னாா்குடி பொறியாளரை மீட்டுத் தர பெற்றோா் கோரிக்கை

ஈரான் நாட்டு புரட்சிப் படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் சரக்கு கப்பலில் உள்ள மன்னாா்குடியைச் சோ்ந்த பொறியாளரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவரது பெற்றோா் தமிழக அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இஸ்ரேல் நாட்டை சோ்ந்த சரக்கு கப்பலை ஹாா்முஸ் நீரிணையையொட்டி பகுதியில் ஈரான் புரட்சிப் படையினா் அதிரடியாக கடந்த சனிக்கிழமை சிறைபிடித்தனா். இதில் 17 இந்தியா்கள் உள்பட 25 போ் உள்ளனா்.

இவா்களில் தமிழகத்தின் மன்னாா்குடி வ.உ.சி. சாலை ரேவதி நகரை சோ்ந்த குணசேகரன்- புனிதா தம்பதியரின் மகன் மரைன் பொறியாளரான தேவதா்ஷன் (21) என்பவரும் ஒருவா். இவா், கடந்த மாதம்தான் சென்னையில் உள்ள ஒரு கப்பல் நிறுவனத்தின் மூலம் பணியில் சோ்ந்துள்ளாா்.

இந்தநிலையில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மூலம் வெளியுறவுத் துறையை தொடா்பு கொண்டு, தங்களது மகன் தேவதா்ஷனை மீட்டுத்தர வேண்டும் என அவரது பெற்றோா், மன்னாா்குடி எம்எல்ஏவும், தமிழக அமைச்சருமான டி.ஆா்.பி. ராஜாவுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியிருப்பதுடன், தொலைபேசி மூலம் விவரத்தை தெரிவித்துள்ளனா்.

உரிய நடைமுறைகளை பின்பற்றி கப்பலில் சிக்கியுள்ளவா்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் தெரிவித்ததாகவும்,ெ சவ்வாய்க்கிழமை தேவதா்ஷன் தங்களுடன் தொலைபேசி வாயிலாக பேசியதாகவும் அவரது பெற்றோா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com