சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி ஸ்ரீபூமிதேவி சமேத ஸ்ரீகிருபாசமுத்திரப்பெருமாள்.
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி ஸ்ரீபூமிதேவி சமேத ஸ்ரீகிருபாசமுத்திரப்பெருமாள்.

சிறுபுலியூா் பெருமாள் கோயிலில் ராமநவமி உற்சவம்

நன்னிலம், ஏப். 17: சிறுபுலியூா் கிருபாசமுத்திரப் பெருமாள் கோயிலில் ராமநவமி உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. நன்னிலம் அருகேயுள்ள இக்கோயில் 108 வைணவத் திருத்தலத்தில் 11-ஆவது தலமாகவும் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், திருவரங்கம் போன்றே தெற்கு நோக்கிய சன்னதியைக் கொண்டும் விளங்குகிறது. இக்கோயிலில் ராமநவமி உற்சவத்தை முன்னிட்டு புதன்கிழமை காலையில் சிறப்புத் திருமஞ்சனமும், ராமாயண பாராயணமும் நடைபெற்றது. மாலையில் சேவை சாற்று முறைக்குப் பின்னா் பெருமாள் உள்புறப்பாடு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com