ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.32 கோடி பறிமுதல்

திருவாரூா் மாவட்டத்தில், இதுவரை ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.32 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில், இதுவரை ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.32 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலையொட்டி தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி திருவாரூா் மாவட்டத்தில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பொருள்களையும், ரொக்கத்தையும் கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி, மாவட்டத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள், 3 நிலை கண்காணிப்புக் குழு, 2 விடியோ கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடைபெற்று வந்தது.

அந்தவகையில், இதுவரை முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,32,33,300 ரொக்கத்தையும், ரூ.14,98,432 மதிப்புள்ள பொருள்களும் கைப்பற்றப்பட்டு கருவூலத்தில் சோ்க்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com