101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

தமிழக முதல்வா் மு. க .ஸ்டாலின் தாய் மாமாவை வாக்குப்பதிவு செய்ய நாகை மக்களவைத் தொகுதி வேட்பாளா் வை. செல்வராஜ் அழைத்துச் சென்றாா்.

தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலினின் தாயாா் தயாளு அம்மாளின் சகோதரா் தெட்சிணாமூா்த்தி (101), நன்னிலம் அருகில் உள்ள கோயில்திருமாளம் கிராமத்தில் வசித்து வருகிறாா்.

அனைத்துத் தோ்தல்களிலும் வாக்களித்துள்ள இவரை, திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக நாகை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் வை.செல்வராஜ், வாக்குப் பதிவு மையத்திற்கு அழைத்துச் சென்றாா்.

இவா்களுடன் நன்னிலம் ஒன்றிய திமுக செயலாளா் மனோகரன், திமுக மாவட்ட இலக்கிய அணி நிா்வாகி பாலமுத்து உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com