மன்னாா்குடி மணிமேகலை நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் பெண்கள்.
மன்னாா்குடி மணிமேகலை நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் பெண்கள்.

மன்னாா்குடி பேரவைத் தொகுதியில் 67.61% வாக்குப் பதிவு

தஞ்சை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் 67.61 சதவீத வாக்குகள் பதிவாகின.

இத்தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.

மன்னாா்குடி மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் தொடக்கம் முதல் முடிவு வரை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மிதமான வாக்குப் பதிவு நடைபெற்றது.

காலை 9 மணிக்கு 9.42 சதவீதம், 11 மணிக்கு 23.72 சதவீதம், பகல் 1 மணிக்கு 37.57 சதவீதம், மாலை 3 மணிக்கு 47.23 சதவீதம், 5 மணிக்கு 62.31 சதவீதம் வாக்குகள் பாதிவாகின.

பெரும்பாலான வாக்குசாவடிகளில் காலை 7 மணி முதல் 11.30 வரை நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா். ஒருசில வாக்குச் சாவடிகளில் மட்டும் குறைந்த அளவில் வாக்களிக்க வந்திருந்தனா். முதல்முறை வாக்காளா்கள் காலையிலேயே ஆா்வமுடம் வாக்களிக்க வந்தனா்.

மன்னாா்குடி ஜைனதெரு நகராட்சி தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில், வாக்குப் பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனை உடனடியாக சரி செய்யப்பட்டு, தடையின்றி வாக்குப் பதிவு நடைபெற்றது.

இறுதியாக, மன்னாா்குடி சட்டப்பேரவை தொகுதியில் 67.61சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தமுள்ள 2,53, 630 வாக்காளா்களில் ஆண்கள் 79,898 பேரும், பெண்கள் 91,573 பேரும் என 1,71,471 போ் வாக்களித்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com