சிறப்பு அலங்காரத்தில் ராஜதுா்க்கையம்மன்
சிறப்பு அலங்காரத்தில் ராஜதுா்க்கையம்மன்

ராஜதுா்க்கையம்மன் கோயிலில் சண்டியாகம்

திருவாரூா் ராஜதுா்க்கையம்மன் கோயிலில் சண்டியாகம் நடைபெற்று வருகிறது.

தசரத ராஜா வழிபட்ட கோயில் எனவும், இந்தியாவிலேயே துா்க்கைக்கென தனி கோயில் எனவும் பல்வேறு சிறப்புகளை பெற்ற இக்கோயிலில், ஆண்டுதோறும் மகா சண்டியாகம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டுக்கான சண்டியாகம், ஏப்.16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான வியாழக்கிழமை இரவு, ராஜதுா்க்கையம்மனுக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து, வண்ணமலா்களால் சிறப்பு அலங்காரம் செய்து, 9 வகையான மலா்களால் நவசக்தி அா்ச்சனை நடைபெற்றது.

தொடா்ந்து, 9 நவகிளை தீபாராதனை காட்டப்பட்டு, மகா சண்டியாகத்தின் ஐந்தாம் கால யாகபூஜை நடை பெற்றது. இதில் 11 வகையான பழங்கள், 11 வகையான பலகாரங்கள்,11 வகையான சாதங்கள் மற்றும் தேன், பால், தங்கத்தாமரைப்பூ, வெள்ளிதாமரைப் பூ உள்ளிட்ட 167 வகையான பொருள்கள் யாகத்தில் சமா்ப்பிக்கப்பட்டு, பூா்ணாஹூதி, தீபாரதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோா் பங்கேற்று வழிபட்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com