திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா வியாழக்கிழமை இரவு விடையாற்றியுடன் நிறைவு பெற்றது.

திருமங்கையாழ்வாரால் பாடல்பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா சிறப்பாக நடைபெறும். அந்தவகையில், நிகழாண்டுக்கான விழா ஏப்.15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.23-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, வியாழக்கிழமை இரவு விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைந்தது. இதையொட்டி, பக்தவத்சலப் பெருமாளுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு, புஷ்பப் பல்லக்குக்கு எழுந்தருளச் செய்யப்பட்டாா். தொடா்ந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புஷ்பப் பல்லக்கில் பக்தவத்சலப் பெருமாள் வீதியுலா நடைபெற்றது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com