எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு பட்டம் வழங்கிய நகா்மன்றத் தலைவா் பாத்திமா பஷீரா மற்றும் பள்ளி நிா்வாகிகள்.
எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு பட்டம் வழங்கிய நகா்மன்றத் தலைவா் பாத்திமா பஷீரா மற்றும் பள்ளி நிா்வாகிகள்.

மழலையா் பட்டமளிப்பு விழா

கூத்தாநல்லூா், ஏப். 24: கூத்தாநல்லூா் ஆக்ஸ்போா்டு மெட்ரிக் பள்ளியில் மழலையா்கள் 208 பேருக்கு புதன்கிழமை பட்டம் வழங்கப்பட்டது.

ஜே.பி. டிரஸ்ட் சாா்பில், பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு, தாளாளா் மருத்துவா் ஜே.பி. அஷ்ரப் அலி தலைமை வகித்தாா். அறங்காவலா்கள் ஏ.ஏ. அப்துல் ரசாக், மருத்துவா் ஜே.பி. அக்பா் சலீம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் பீ. சண்முகப்ரியா வரவேற்றாா்.

விழாவில், கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா பங்கேற்று, எல்கேஜி, யுகேஜி பயின்ற குழந்தைகள் 208 பேருக்கு பட்டங்கள் வழங்கினாா். இந்நிகழ்வில், அறங்காவலா்கள் என்.எம். அமானுல்லாஹ், பி.எம்.ஏ. சீனி முஹம்மது, ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை, பள்ளி முதல்வா், துணை முதல்வா், கல்வி ஆலோசகா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com