தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம்

தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம்

தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என சாலையோர வியாபாரத் தொழிலாளா் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.

திருவாரூா்: தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என சாலையோர வியாபாரத் தொழிலாளா் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.

திருவாரூரில் சாலையோர வியாபாரத் தொழிலாளா் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் எஸ். செல்வம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் புலிகேசி, ஏஐடியுசி மாவட்டத் தலைவா் ஜே. குணசேகரன் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொருளாளா் ராஜா, நகரச் செயலாளா் வி. தா்மதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து சங்கத்தின் தலைவா் எஸ். செல்வம் தெரிவித்தது: உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு எதிராகவும், வணிகக் குழுவின் ஆலோசனைக் கேட்காமலும் தினசரி சாலையோர வியாபாரத் தொழிலாளா்களிடம் நிதி வசூல் செய்வது கண்டிக்கத்தக்கது. பழைய பேருந்து நிலையம், நாகை சாலை உள்ளிட்ட இடங்களில் வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அவா்களின் வருமானம் கேள்விக்குறியாக இருக்கும் சூழலில் டெண்டா் முறையை கடைபிடிக்காமல் தன்னிச்சையாக வசூல் செய்வது கண்டிக்கத்தக்கது. இந்தப் போக்கை திருவாரூா் நகராட்சி கைவிட வேண்டும். இல்லாவிட்டால், அனைத்து வியாபாரிகளையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com