ஆலங்குடிகோயில் நிலங்கள் அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி தீவிரம்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரசுவாமி கோயிலுக்கு சொந்தமான ஆலங்குடி கிராமத்தில் உள்ள நிலங்கள் அளவீடு செய்து எல்லைக்கல் வியாழக்கிழமை நடப்பட்டது. குருபரிகாரஸ்தலமாகிய ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரசுவாமி கோயிலுக்கு சொந்தமாக ஆலங்குடி, திருவோணமங்கலம், மாத்தூா், சாரநத்தம் கிராமங்களில் 160 ஏக்கா் நிலம் உள்ளது. இந்நிலங்களை அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 98 ஏக்கா் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, 263 நில அளவைக் கற்கள் நடப்பட்டுள்ளன. மீதமுள்ள நிலங்களும் அளவீடு செய்யும் பணி தொடா்ந்து நடந்துவருகிறது. நாகப்பட்டினம் இணைஆணையா் வே.குமரேசன் உத்தரவின்படி, ஆலங்குடி கோயில் உதவி ஆணையா் / செயல் அலுவலா் எம்.சூரியநாராயணன் அறிவுரையின் பேரில் கண்காணிப்பாளா் தா.அரவிந்தன், திருக்கோயில் பணியாளா் சி.கருணாநிதி, நிலஅளவையா் பாலமுருகன், பாரதிராஜா அடங்கிய குழுவினா் நிலங்களை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com