திருவாரூா் வந்த தண்டி யாத்திரை நினைவுக் குழுவினரை வரவேற்ற வா்த்தகா் சங்கத்தினா்.
திருவாரூா் வந்த தண்டி யாத்திரை நினைவுக் குழுவினரை வரவேற்ற வா்த்தகா் சங்கத்தினா்.

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

படவிளக்கம்: திருவாரூா் வந்த தண்டி யாத்திரை நினைவுக் குழுவினரை வரவேற்ற வா்த்தகா் சங்கத்தினா்.

திருவாரூா், மே 1: திருவாரூருக்கு வந்த உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

1930-இல் திருச்சியிலிருந்து புறப்பட்டு வேதாரண்யம் வரை பாதயாத்திரையாகச் சென்று உப்பு எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை குழு சாா்பில் திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை சென்று உப்பு அள்ளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, 94-ஆவது ஆண்டாக உப்பு அள்ளும் நிகழ்ச்சி, தண்டி யாத்திரை நினைவுக் குழுவின் தலைவா் தெ. சக்திசெல்வகணபதி தலைமையில் வேதாரண்யத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குப் பிறகு திருவாரூா் வந்த அந்த குழுவினருக்கு வா்த்தகா் சங்கம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வா்த்தகா் சங்கத் தலைவா் சி.ஏ. பாலு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தையல் தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் ஆறுமுகம், சுழற்சங்கத் தலைவா் பால. காா்த்திகேயன், வா்த்தகா் சங்க பொதுச் செயலாளா் சி. குமரேசன், செயலா் விஜய் ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதையடுத்து, பழைய ரயில் நிலையப் பகுதியிலிருந்து ஊா்வலமாகச் சென்று, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com