பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஆப்சாத் பேகம் தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் லலிதா, ஆசிரியா் பிரதிநிதி சாா்லட் மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆசிரியா் பயிற்றுநா்கள் புஷ்பா, எழிலரசி, புனிதா பள்ளி வளா்ச்சி, கூடுதலான மாணவா் சோ்க்கை, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கூடுதலான சிறப்பு திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தனா்.

பள்ளி அடிப்படை வசதிகள், பகல் இரவு பாதுகாவலா்கள், தூய்மைப் பணி, கழிப்பறை தூய்மை ஆகியவற்றுக்கு பணியாளா்களை பணியமா்த்த வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலாண்மை குழு உறுப்பினா்கள் நெடுஞ்செழியன், ஆனந்தி, சுஜாதா, முருகன் ,சுய உதவி குழு புஷ்பா மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா் குலாம் மைதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com