மஞ்சக்குடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞா்.
மஞ்சக்குடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞா்.

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

திருவாரூா் அருகே இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞா், ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் அருகே இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞா், ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் மாவட்டத்தில் பொதுமக்களின் உயிருக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில், சாலைகளில் அஜாக்கிரதையாகவும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும் இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் ஈடுபட்டு, அதை சமூக வலைதளங்களில் பதிவிடும் நபா்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, கும்பகோணம் சாலையில் மஞ்சக்குடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்ட கும்பகோணம் தாலுகா, திருச்சேறை பகுதியைச் சோ்ந்த அஜய் (19) என்பவரை குடவாசல் போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தெரிவிக்கையில், திருவாரூா் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சாகசங்களில் ஈடுபடுவோா் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை மேற்கொண்டு, வாகனங்களை பறிமுதல் செய்து, ஓட்டுநா் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com