அடியக்கமங்கலத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்றோா்.
அடியக்கமங்கலத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்றோா்.

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சாா்பில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சாா்பில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனா். இதையொட்டி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் தமிழகம் முழுவதும் இலவச நீா்மோா்பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, கோடை வெப்பத்திலிருந்து மக்களை காக்கும் வகையில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

திருவாரூா் செல்வம் தெருவில் நகரத் தலைவா் மீரான் தலைமையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் பங்கேற்று, மழை வேண்டி தொழுகையில் ஈடுபட்டனா். இதேபோல், அடியக்கமங்கலத்தில் கிளைத் தலைவா் ருமைசுதீன் தலைமையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com