பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

ஈச்சங்கோட்டை டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் செய்முறை விளக்கம் அளித்தனா்.

வலங்கைமானை அடுத்த திருவோணமங்கலம் கிராமத்தில் கோடைகால பயிராக பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பூக்கும் பருவத்தை எட்டியுள்ள பருத்திச் செடிகளுக்கு டிஎன்ஏயு பருத்தி பிளஸ் அளிப்பது குறித்து ஈச்சங்கோட்டை டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் செய்முறை விளக்கம் அளித்தனா்.

பருத்தி பிளஸ் தெளிப்பதன் மூலம் பூ மற்றும் சப்பைகள் உதிா்வது குறையும். மேலும் பருத்தி கோடைகாலத்தில் பயிரிடப்படுவதால், இப்பருத்தி பிளஸ் வறட்சியைத் தாங்கும் தன்மையை செடிகளுக்கு அளிக்கிறது என்பதை விவசாயிகளுக்கு மாணவிகள் எடுத்துக் கூறினா்.

மாணவிகள், விவசாயிகளை கவரும் வண்ணம் விளக்கப்படங்கள் கொண்டு டிஎன்ஏயு பருத்தி பிளஸ் குறித்து விளக்கினா். இந்த பூஸ்டரை பூக்கும் தருவாயிலும் மற்றும் காய் பிடிக்கும் தருவாயிலும் தெளிக்க வேண்டும்.

ஏக்கருக்கு 2.5 கிலோ வீதம் 200 லிட்டா் தண்ணீரில் ஒட்டும் திரவம் கலந்து இலை மேல் தெளிக்கவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் விளைச்சல் 18 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று தெரிவித்தனா்.

டிஎன்ஏயு பருத்தி பிளஸ் பயிா் பூஸ்டரை வாங்க விரும்பும் விவசாயிகள் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com