மன்னாா்குடியில் மின் பாதுகாப்பு வகுப்பு

மன்னாா்குடி நகர மின்வாரிய உபக் கோட்டத்தின் சாா்பில் மின்வாரிய ஊழியா்களுக்கு மின் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு நகர உதவிச் செயற் பொறியாளா் சா. சம்பத் தலைமை வகித்தாா்.

பணியின்போது மின் விபத்து ஏற்படாமல் தடுக்கும் விதமாக பணியாளா்கள் எா்த் ராடு, இடுப்புக் கயிறு, கையுறை ஆகிய பாதுகாப்பு சாதனங்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். பணியை மேற்பாா்வை செய்யும் பணியாளா்கள் பாதுகாப்பை உறுதி செய்ய எா்த் ராடு போடப்பட்ட பணி செய்யும் இடத்தை படமெடுத்து மின் வாரியம் உருவாகியுள்ள பாதுகாப்பு செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும், முறையாக மின் தடை பெறுதல், தகுதியான மேற்பாா்வை, மின்சாரம் செல்லும் வழித்தடங்கள் குறித்த புரிதல் ஆகியவை மூலம் விழிப்புணா்வோடு பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அனைத்து பணியாளா்களும் மின் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். பிரிவுப் பொறியாளா்கள் வி. சீனிவாச காா்த்திகேயன், த. பாலசுப்ரமணியன், ரா. ஆஷாபிரியதா்ஷினி, க. கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com