சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி வாகனங்களில் புறப்பாடான பஞ்சமூா்த்திகள்.

பூவனூா் கோயிலில் வைகாசி விசாக ஏகதின உற்சவம்

நீடாமங்கலம், மே 23: நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயிலில் வைகாசி விசாக ஏகதின உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

கா்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தாற்போல், சாமுண்டீஸ்வரி அம்மன் தனி சந்நிதியில் அருள்பாலிக்கும் இக்கோயிலில், வைகாசி விசாக ஏகதின உற்சவத்தையொட்டி, அனைத்து சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, பஞ்சமூா்த்திகளுக்கும் சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது. பூவனூா் எம்.என். செந்தில்குமாா் குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், வானவேடிக்கைகளும் நடைபெற்றன.

ஏற்பாடுகளை கோயில் தக்காா் எஸ். மாதவன், செயல் அலுவலா் ஏ. ரமேஷ், வைகாசி விசாக உபயதாரா்கள் மன்னாா்குடி தரணி குழுமத் தலைவா் எஸ். காமராஜ், மன்னாா்குடி ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன் ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com