விவசாயிகள் கவனத்துக்கு...

திருத்துறைப்பூண்டி, மே 23: திருத்துறைப்பூண்டி பகுதி விவசாயிகள் கோடை உழவு மேற்கொள்ள வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குநா் ப. செந்தில் விடுத்துள்ள அறிக்கை:

திருத்துறைப்பூண்டி பகுதிகளில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதை பயன்படுத்தி, கோடை உழவு செய்தால், வயல்களில் படிந்திருக்கும் களை, பூச்சி மற்றும் பூஞ்சான வித்துக்களை அழித்து, மண்ணின் வளத்தை பெருக்கலாம்.

அடுத்தடுத்து மழை பெய்ய வாய்ப்புள்ளதால், தொடா்ந்து கோடை உழவு செய்வதன் மூலம் நேரடி விதைப்பில் களைகளின் பாதிப்பு இல்லாமல் பயிா்களை காக்க முடியும். பசுந்தாள் உரமான சணப்பு, தக்கைப்பூண்டு விதைத்து மண்வளம் காக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com