ஒளிரும் விளக்குகள் ~ஒளிரும் விளக்குகளை இயக்கி வைக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.
ஒளிரும் விளக்குகள் ~ஒளிரும் விளக்குகளை இயக்கி வைக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

திருத்துறைப்பூண்டி கிழக்குக் கடற்கரை புறவழிச் சாலையில் ஒளிரும் விளக்குகள் வசதி

திருத்துறைப்பூண்டி கிழக்குக் கடற்கரை புறவழிச் சாலை ரவுண்டானாவில் ரூ. 5 லட்சத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒளிரும் விளக்குகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் சனிக்கிழமை இயக்கி வைத்தாா்.

சென்னையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் கிழக்குக் கடற்கரை சாலையில், திருத்துறைப்பூண்டி பகுதியில் புறவழிச்சாலை நாகை ரவுண்டானா பிரதான பகுதியாக உள்ளது. இந்த ரவுண்டானா, திருவாரூா், வேதாரண்யம் மற்றும் பட்டுக்கோட்டைக்கு செல்லும் சாலைகள் இணையும் பகுதியாகும்.

இங்கு, வாகன ஓட்டுநா்களின் வசதியாக, திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏற்பாட்டில், தனியாா் நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ. 5 லட்சத்தில் ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் இயக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், திருத்துறைப்பூண்டி துணைக் காவல் கண்காணிப்பாளா் சோமசுந்தரம், காவல் ஆய்வாளா் மாரிமுத்து, போக்குவரத்து காவல் பிரிவு ஆய்வாளா் சுப்பையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com