தில்லி அரசு சார்பில் சர்வதேச ஓசோன் நாள் கடைப்பிடிப்பு

தில்லி அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை சார்பில் அலிப்பூரையடுத்து பகோலியில் உள்ள 'மகாத்மா காந்தி இன்ஸ்டிடியூட் ஃபார் காம்பேட்டிங் கிளைமேட் சேன்ஞ்சில்' (எம்ஜிஐசிசி) சர்வதேச ஓசோன் நாள்

தில்லி அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை சார்பில் அலிப்பூரையடுத்து பகோலியில் உள்ள 'மகாத்மா காந்தி இன்ஸ்டிடியூட் ஃபார் காம்பேட்டிங் கிளைமேட் சேன்ஞ்சில்' (எம்ஜிஐசிசி) சர்வதேச ஓசோன் நாள் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதில் தில்லி சுற்றுச்சுழல், வனத் துறை அமைச்சர் இம்ரான் ஹுசைன் பங்கேற்றுப் பேசினார். அப்போது 'சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பசுமையை வளர்த்து எடுக்க தில்லி அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களுக்கும் மாணவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்' என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஆர்.கே. ஜெனமணி, ஓசோன் குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதன் பங்களிப்பு குறித்தும் விளக்கம் அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் சுமார் 180 பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த ஈகோ கிளப் மாணவர்களும், ஆசிரியர்களும் பங்கேற்றனர். ஓசோன், சுற்றுச்சூழல் குறித்த வினாடி - வினாவும் மாணவர்களுக்கு நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிகழ்ச்சியில் சான்றிதழ் வழங்கப்பட்டது. தில்லி சுற்றுச்சூழல் துறை இயக்குநர் அனில் குமார், எம்ஜிஐசிசி இயக்குநர் பி.சி. சபதா, வித்யுலதா, ரவீந்தர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
முன்னதாக, எம்ஜிஐசிசி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின்தகடு உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க சக்தியை உருவாக்கும் சாதனங்களை அமைச்சர் இம்ரான் ஹுசைன் பார்வையிட்டதுடன், இதுபோன்ற நிகழ்ச்சிகளை மாணவர் சமுதாயம் பயன்பெறும் வகையில் அடிக்கடி நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com