பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடை :யாருமே பொருள்படுத்தவில்லை

களக்காடு, மே 2: ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடைதிருநெல்வேலி மாவட்டத்தில் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வந்தாலும், அதனை யாருமே பொருள்படுத்தாமல் பிளாஸ்டிக் பொருள்களின் வி

களக்காடு, மே 2: ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடைதிருநெல்வேலி மாவட்டத்தில் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வந்தாலும், அதனை யாருமே பொருள்படுத்தாமல் பிளாஸ்டிக் பொருள்களின் விற்பனை மற்றும் அதன் பயன்பாடு வழக்கம்போலவே தொடர்ந்து நடைபெறுகிறது.

  ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் கேரி பேக், டீ கப், தண்ணீர் கப் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பவை எனக் கூறி திருநெல்வேலிமாவட்டத்தில் ஜனவரி முதல் இவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர், இத் தடை படிப்படியாக நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளிலும் அமல்படுத்தப்பட்டது.

  பிளாஸ்டிக் தடை குறித்து டிஜிட்டல் பேனர்கள் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்தப்பட்டன. ஆனால், தற்போதும் வழக்கம் போலவே அனைத்து வணிக நிறுவனங்களிலும், உணவகங்களிலும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

  பிளாஸ்டிக் தடை குறித்து விளம்பரப் பேனர்கள் வைப்பதுடன் தங்களது கடமை முடிந்து விட்டதாகவே உள்ளாட்சி அமைப்புகள் கருதுகின்றன. உரிய கண்காணிப்பு செய்வதில்லை. மேலும், பொதுமக்களும் பொருள்கள் வாங்கச் செல்லும்போது உரிய துணிப் பைகளை எடுத்துச் செல்ல விரும்புவதும் இல்லை.

  உணவகங்களில் சாம்பார், குருமா, சட்னி உள்ளிட்டவைகளை இன்றும் தடிமன் குறைந்த பிளாஸ்டிக் பைகளில் ஊற்றி ரப்பர் பேண்ட் வைத்து கட்டியே கொடுக்கின்றனர்.  இதே போல, பழச்சாறு கடைகளில் மட்டுமின்றி டீ. காபியும்கூட பாலிதீன் பைகளில் சூடாக நிரப்பி "பார்சல்' அளிக்கப்படுகிறது. கடைகளில் டீயை பார்சல் செய்ய பிளாஸ்டிக் பை, ஊற்றிக் குடிக்க பிளாஸ்டிக் கப், இந்த இரண்டையும் கொண்டு செல்ல கேரி பேக் என்ற அளவில் சாதாரண டீ கடைகளில் கூட பார்சல் வாங்கிச் செல்லும்போது 3 பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படும் போக்கு அதிகரித்து வருகிறது.

  உணவகங்கள், வியாபார நிறுவனங்கள் இவைகளில் பிளாஸ்டிக் தடையை முறையாக அமல்படுத்தி, உரிய கண்காணிப்பும் செய்திட்டால் மட்டுமே பிளாஸ்டிக்கை படிப்படியாக ஒழிக்க முடியும். இல்லையேல் வெறும் விளம்பரத்தோடு மட்டுமே நின்றுவிடும் பிளாஸ்டிக் தடை திட்டம்.

  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளிலும் பிளாஸ்டிக் தடையை முறையாக அமல்படுத்துவதுடன், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்வதையும்,அவற்றை உற்பத்தி செய்வதையும் தடை செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் துணிச்சலும் உறுதியும் இருக்க வேண்டும்.  இல்லாவிட்டால் பிளாஸ்டிக்கும் அழியாது.

சூழல் மாசும் ஒழியாது. தீர்வு அமல் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் கைகளில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com