களக்காடு அருகே பஸ் வசதியின்றி தவிக்கும் கிராமம்!

களக்காடு, செப். 20: களக்காடு அருகேயுள்ள கிராமத்துக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக  அரசு பஸ்கள் இயக்கப்படாததால், கிராம மக்கள் அதிக கட்டணம் கொடுத்து  ஆட்டோவில் பயணம் செய்யும் நிலை உள்ளது. களக்காட்டிலிர

களக்காடு, செப். 20: களக்காடு அருகேயுள்ள கிராமத்துக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக  அரசு பஸ்கள் இயக்கப்படாததால், கிராம மக்கள் அதிக கட்டணம் கொடுத்து  ஆட்டோவில் பயணம் செய்யும் நிலை உள்ளது.

களக்காட்டிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் சிதம்பரபுரம். களக்காடு பேரூராட்சிக்குள்பட்ட 8, 9-வது வார்டுகள் மற்றும் சீவலப்பேரி ஊராட்சியைச் சேர்ந்த முத்துநகர், சேதுராயபுரம் ஆகிய பகுதிகள் இக் கிராமத்துடன்  இணைந்துள்ளன.

5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வரும் இக்கிராமத்தில் ஓர் ஆரம்பப் பள்ளி,  ஒரு நடுநிலைப் பள்ளி உள்ளது. இடைநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி, மருத்துவம்,  விவசாய இடுபொருள்கள் மற்றும் மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்துத்  தேவைகளுக்கும் இக்கிராம மக்கள் களக்காட்டுக்குதான் வந்து செல்ல வேண்டும்.

இக்கிராமத்துக்கு வள்ளியூர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இருந்து கடந்த பல  ஆண்டுகளாக தடம் எண்.1 நகரப் பேருந்து காலை 7, பிற்பகல் 1, பிற்பகல் 3, இரவு  9 மணிக்கும், பாபநாசம்

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இருந்து தடம் எண். 8  நகரப் பேருந்து முற்பகல் 10.30, மாலை 5.30 மணிக்கும், தடம் எண்.127 இரவு 7  மணிக்கும் வந்து சென்றது.கடந்த சில ஆண்டுகளாக இந்த பஸ்கள் அனைத்தும் வாய்மொழி ஆணைப்படி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தடம் எண்.127 மட்டும் இரவு 11.30-க்கு சிதம்பரபுரம் சென்று அங்கேயே நிறுத்திவைக்கப்பட்டு, காலை 5.30-க்கு திருநெல்வேலிக்கு புறப்பட்டுச் செல்கிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மினி பஸ்கள் அறிமுகமானபோது, வள்ளியூரில்  இருந்து சிதம்பரபுரம் வழியாக களக்காட்டுக்கு 2 தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான  4 மினி பஸ்களுக்கு அரசு அனுமதி அளித்தது.

இதனால் அரசு பஸ்கள் வாய்மொழி  ஆணையின்படி நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக 3 மினி பஸ்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. இப்போது ஒரே ஒரு மின் பஸ் மட்டுமே  இயக்கப்படுகிறது.

சில நாள்களில் அதுவும் இயக்கப்படுவதில்லை.

இதனால் களக்காட்டிலிருந்து சிதம்பரபுரம் செல்வதற்கு இக்கிராம மக்கள் அதிக  கட்டணம் கொடுத்து ஆட்டோவில் பயணம் செய்யும் அவல நிலை பல ஆண்டுகளாகத் தொடர்கிறது.

இப்போது ஒரே ஒரு மினி பஸ் மட்டுமே இயக்கப்படுவதால், வசதியுள்ளவர்கள்  ஆட்டோக்களில் சென்றுவிடுகின்றனர். ஆனால், கூலித் தொழிலாளர்கள் ஆட்டோக்களில் செல்ல வசதியின்றி மிகவும் அவதிப்படுகின்றனர்.

எனவே, நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை பொதுமக்கள் நலன் கருதி, மீண்டும் தடையின்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இக்கிராம மக்களின்எதிர்பார்ப்பு.

"மணிக்கணக்கில் காத்திருக்கிறோம்'

"பஸ் வசதி இல்லாததால், சைக்கிளில் வெளியூருக்குச் சென்றுவிட்டு இரவு நேரத்தில் வரும்போது, களக்காடு புதுத்தெரு பகுதியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளதால் மிகவும் சிரமப்படுகிறோம்' என்றார் களக்காட்டில் தையல் தொழிலாளியாகப்  பணிபுரியும் சேகர்.

இதே ஊரைச் சேர்ந்த அதிமுக பிரதிநிதி ராமச்சந்திரன், "கடந்த சில  ஆண்டுகளாக மினி பஸ்களும் நிறுத்தப்பட்டுவிட்டதால் அரசு பஸ்ûஸ மீண்டும்  இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

"சிதம்பரபுரத்தில் மினி பஸ்ஸýக்காக மக்கள் வெயிலில் மணிக்கணக்கில் காத்திருப்பதாக' வேதனை தெரிவித்தார் இவ்வூரில் உணவகம் நடத்திவரும்  செல்வகுமார்.

"4 மினி பஸ்கள் இயக்கப்பட்டபோது மக்கள் சிரமமின்றி களக்காடு சென்று வந்தனர்.  இப்போது அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டதால் அரசு பஸ்ûஸ மீண்டும் இயக்க  வேண்டும்' என்று விவசாயி கண்ணன், கூலித் தொழிலாளி சுடர்மணி ஆகியோர்  தெரிவித்தனர்.

இது தொடர்பாக, களக்காடு ஊராட்சி ஒன்றியத் தலைவர் அ. தமிழ்ச்செல்வனிடம்  கேட்டபோது, களக்காடு அருகேயுள்ள சாலைநயினார் பள்ளிவாசலில் இருந்து  சிதம்பரபுரம் வழியாக களக்காட்டுக்கு அரசு பஸ்களை இயக்க  வேண்டும், ஏற்கெனவே இக்கிராமத்துக்கு இயக்கப்பட்ட பஸ்களை மீண்டும்  இயக்க வலியுறுத்தி பலமுறை சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை  அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளேன். இதுவரை நடவடிக்கை இல்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com