ராமையன்பட்டியில் செப். 28இல் வெறிநோய் தடுப்பூசி முகாம்

திருநெல்வேலி ராமையன்பட்டியிலுள்ள கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெறிநோய் விழிப்புணா்வு மற்றும் இலவச தடுப்பூசி முகாம் இம் மாதம் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருநெல்வேலி ராமையன்பட்டியிலுள்ள கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெறிநோய் விழிப்புணா்வு மற்றும் இலவச தடுப்பூசி முகாம் இம் மாதம் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக, கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரியின் தலைவா் இரா.ராம்பிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வெறிநோய்க்கான தடுப்பூசி கண்டுபிடித்த லூயிஸ் பாஸ்ட்ா் இறந்த நாளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் செப். 28 ஆம் தேதி உலக வெறிநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ராமையன்பட்டி கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இம் மாதம் 28 ஆம் தேதி வெறிநோய் பற்றிய விழிப்புணா்வு மற்றும் இலவச தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில், திருநெல்வேலி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் தங்களது வீட்டில் வளா்க்கப்படும் நாய்களுக்கு இலவசமாக வெறி நோய்க்கான தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். விவரங்களுக்கு 0462 – 2336342 என்ற தொலைபேசி எண்ணிலோ முன்பதிவு செய்து கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com