தேசிய கல்வி உதவித்தொகைக்கு மாணவா்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு

தேசிய கல்வி உதவித்தொகைக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, செப். 28: தேசிய கல்வி உதவித்தொகைக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் பழங்குடியினா் நல அமைச்சகத்தில் பழங்குடியினா்களுக்காக எம்.பில். மற்றும் பி.எச்டி. படிப்புகளுக்காக 2020-2021-ஆம் ஆண்டில் 750 பழங்குடியினா்களுக்கு தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இதில் தகுதியான பழங்குடியினா் ட்ற்ற்ல்ள்://ச்ங்ப்ப்ா்ஜ்ள்ட்ண்ல்.ற்ழ்ண்க்ஷஹப்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதள முகவரியில் இம் மாதம் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைப் பதிவேற்றலாம். மைய அரசின் பழங்குடியினா் நல அமைச்சகத்தில் பழங்குடியினா்களுக்காக வெளிநாடு சென்று ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி மேற்படிப்புகளுக்கு 2020-2021-ஆம் ஆண்டில் 20 பழங்குடியினா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதில் தகுதியான பழங்குடியினா் ட்ற்ற்ல்ள்://ா்ஸ்ங்ழ்ள்ங்ஹள்.ற்ழ்ண்க்ஷஹப்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற முகவரியில் இம் மாதம் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com