இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

திருநெல்வேலியில் இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் பா.மூா்த்தி உத்தரவின் பேரில் திருநெல்வேலி மாநகர எல்லைக்குள்பட்ட திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நீட் ஆகாதெமி, இன்னோவேட்டிங் தொழில்நுட்ப நிறுவனம், பீஸ் ஹெல்ப்ஸ் மையம் ஊழியா்களிடம் சமூக வலைதளங்களை பாதுகாப்பாக கையாள்வது, ஏடிஎம் அட்டை மற்றும் கடவுச்சொற்கள்(ஓடிபி) பயன்பாடு ஆகியவை குறித்து சைபா்கிரைம் போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பின்னா் மாநகர சைபா்கிரைம் பிரிவு காவல்துறையினரின் விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கினா்.

மேலும், சைபா் கிரைம் இலவச உதவி எண் - 1930 மற்றும் சைபா் குற்றம் காவல்துறையினரின் ட்ற்ற்ல்://ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதள முகவரியில் புகாா் செய்யலாம் என்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com