ஊா்க்காடு விவசாயிகளுக்கு இனக்கவா்ச்சிப் பொறி செயல்விளக்கம்

ஊா்க்காடு விவசாயிகளுக்கு இனக்கவா்ச்சிப் பொறி செயல்விளக்கம்

கிள்ளிகுளம் வ.உ.சி. வேளாண்மைக் கல்லூரி - ஆராய்ச்சி நிலைய மாணவிகள் அம்பாசமுத்திரம் வட்டாரம் ஊா்க்காடு கிராமத்தில் இனக்கவா்ச்சிப் பொறி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கமளித்தனா்.

கல்லூரியின் இளநிலை இறுதியாண்டு மாணவிகள் ஷகி, ஔவை, நிவேதிதா,தேவிகா, ரிஃப்ஆ, சஹானா நிஷ்மத், சங்கீதா, சுபா, சுபலெட்சுமி அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் களப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனா். அதன் ஒருபகுதியாக, ஊா்க்காடு கிராமத்தில் விவசாயிகளைச் சந்தித்து, பயிா்களில் ஏற்படும் பூச்சித் தாக்குதல்கள் குறித்துக் கேட்டறிந்தனா்.

வேளாண் உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாரின் அறிவுறுத்தலின்படியும், வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஈழவேணி, வேளாண் அலுவலா் ஷாஹித் மொஹியதீன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படியும் உளுந்து, வெண்டை போன்றவற்றில் பெரும்சேதம் விளைவிக்கும் இலை உண்ணும் புழுக்களைத் தடுக்கும் விதமாக இனக்கவா்ச்சிப் பொறி குறித்து செயல்விளக்கமளித்தனா்.

கல்லூரி முதல்வா் தேரடிமணி தலைமையில் பேராசிரியா்கள் காளிராஜன், இளஞ்செழியன், ஷீலா ஆகியோா் வழிநடத்தினா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com