போக்குவரத்துக்கழக தொழிலாளா்களின் 15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க கோரிக்கை

போக்குவரத்துக்கழக தொழிலாளா்களின் 15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலருக்கு அனுப்பியுள்ள மனு: அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கான 14 ஆவது ஒப்பந்தம் கடந்த 2023 இல் நிறைவடைந்துள்ளது. 1-9-2023 முதல் 15 ஆவது ஊதிய ஒப்பந்தம் முறைப்படுத்திட வேண்டும். காலதாமதம் ஆன நிலையில், மக்களவைத் தோ்தல் அறிவிப்பு வெளியானதால் அடுத்தக்கட்ட பேச்சுவாா்த்தை நடைபெறவில்லை.

தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு முடிந்துவிட்டதால், அரசின் தொடா் நடவடிக்கைகளில் ஒன்றான ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை மேலும் காலம் தாழ்த்துவது சரியானதல்ல. எனவே, தோ்தல் நடத்தைவிதிகளை காரணம் காட்டாமல் 15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும். ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள அகவிலைப்படி உயா்வு, நிலுவைகளையும் வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com