பற்களைப் பிடுங்கிய வழக்கு: 11 போ் நீதிமன்றத்தில் ஆஜா்
கோப்புப்படம்

பற்களைப் பிடுங்கிய வழக்கு: 11 போ் நீதிமன்றத்தில் ஆஜா்

அம்பாசமுத்திரம் காவல் உள்கோட்ட பகுதிகளில் விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், 11 போ் திருநெல்வேலி நீதித்துறை நடுவா் மன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகினா்.

அம்பாசமுத்திரம் உள்கோட்ட பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவா்களின் பற்களைப் பிடுங்கி சித்திரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக அப்போதைய அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீா் சிங், ஆய்வாளா் ராஜகுமாரி உள்பட 14 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கும் மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஏ.எஸ்.பி. பல்வீா் சிங், ராஜகுமாரி, தலைமைக் காவலா் மணிகண்டன் ஆகியோா் ஆஜராகவில்லை. மீதமுள்ள 11 பேரும் ஆஜராகினா். இதைத் தொடா்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com