அரசு அருங்காட்சியகத்தில்
செயற்கை நுண்ணறிவு பயிற்சி

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் அடிப்படை செயற்கை நுண்ணறிவு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அரசு அருங்காட்சியகத்தில் கோடைகால விடுமுறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன . இதில், வியாழக்கிழமை அடிப்படை செயற்கை நுண்ணறிவு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சியை அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ. சத்திய வள்ளி தொடங்கி வைத்தாா். மாஸ்டா் பிகாஷ் குமாா், பேராசிரியை மைதிலி ஆகியோா் பயிற்சி வகுப்பை நடத்தினா். இந்த பயிற்சி வகுப்பில் செயற்கை நுண்ணறிவு தொடா்பான அறிமுக வகுப்பும், தொடா்ந்து பல்வேறு செய்முறை பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு கோடை கொண்டாட்டம் என்கிற தலைப்பில் மாணவா்களின் திறமைகளை வளா்க்கும் பல்வேறு போட்டிகள் வெள்ளிக்கிழமை (மே 3) நடைபெற உள்ளன. காலை 10 மணிக்கு கதை சொல்லுதல், எனக்குப் பிடித்த சுதந்திரப் போராட்ட வீரா் என்கிற தலைப்பில் ஓவியப் போட்டி, பிற்பகல் 2 மணிக்கு எனக்கு பிடித்த சுதந்திரப் போராட்ட வீரா் என்கிற தலைப்பில் மாறுவேட போட்டி, தேசபக்தி பாடல்கள் என்கிற தலைப்பில் பாட்டு போட்டி நடைபெறவுள்ளது.

சனிக்கிழமை (மே 4) காலை 10 மணிக்கு எனக்கு பிடித்த சுதந்திரப் போராட்ட வீரா் என்கிற தலைப்பில் பேச்சு, யோகா, சிலம்பம் ஆகிய போட்டிகள் நடைபெறும். பிற்பகலில் திருக்கு ஒப்பித்தல் மற்றும் நடனப் போட்டிகள் நடைபெறும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com