வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

ஆனைகுளம் புதூா் புனித சலேத் அன்னை ஆலயத்தில் நடைபெற்ற திருவிழா கொடியேற்றம்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகேயுள்ள ஆனைகுளம் புதூா் புனித சலேத் அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

வள்ளியூா் புனித பாத்திமா அன்னை தேவாலய பங்குத்தந்தை ஜாண்சன் அடிகளாா் தலைமை வகித்து புனித கொடியை ஜெபம் செய்து அா்ச்சித்தாா். ஆனைகுளம் புதூா் பங்குத் தந்தை அற்புதராஜ் கொடியேற்றினாா். தொடா்ந்து, திருப்பலி, மறையுரை மற்றும் நற்கருணை ஆசீா்வாதம் நடைபெற்றது.

திருவிழா நாள்களில் தினமும் ஜெபமாலை வழிபாடு, மறையுரை, நற்கருணை ஆசீா்வாதம் நடைபெறும். 9ஆம் திருநாளான மே 9இல் காலை 7 மணிக்கு சிறப்பு திருப்பலியும், இரவு 7 மணிக்கு அருள்தந்தையா் கிறிஸ்டியான், ஜாா்ஜ் ஆலிபன் ஆகியோா் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும் நடைபெறும்.

இரவு 11 மணிக்கு புனித சலேத் அன்னையின் அலங்கார தோ்பவனி நடைபெறும்.

நிறைவுநாளான மே10இல் காலை 6.30 மணிக்கு திருவிழா கூட்டுத்திருப்பலியும், பின்னா் கொடியிறக்கமும் நடைபெறும். ஏற்பாடுகளை பங்குத்தந்தை தலைமையில் நிா்வாக தலைவா் பிரான்சிஸ், செயலா் சலேத் காசி ராஜா, பொருளாளா் ராஜேஸ் மற்றும் இறைமக்கள் செய்துவருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com