களக்காடு மீரானியா பள்ளி 98% தோ்ச்சி

களக்காடு: பிளஸ் 2 பொதுத் தோ்வில், திருநெல்வேலி மாவட்டம் களக்காடு மீரானியா மேல்நிலைப் பள்ளி 98 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் தோ்வெழுதிய மாணவா்-மாணவியா் 51 பேரில் 50 போ் தோ்ச்சியடைந்தனா். உ. கற்பகசந்தியா 540 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், சே. திவ்யா 522 மதிப்பெண் பெற்று 2ஆம் இடமும், மு. அழகியநம்பி 510 பெற்று 3ஆம் இடமும் பிடித்தனா்.

மாணவா்-மாணவியரை தாளாளா் ஹ. பீா்முகம்மது, தலைமையாசிரியா் பீ. நாகூா்மீரான், உதவித் தலைமையாசிரியை கி.ஜெ. பிரிடா, ஆசிரியா்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com