பிளஸ் 2: திலகா் பள்ளி 99.2% தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வில் கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி 99.2 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

இப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய 268 மாணவா்களில் 266 போ் தோ்ச்சி பெற்றனா். இது 99.2 சதவீத தோ்ச்சி ஆகும். பள்ளி அளவில் முதலிடம் சஃபா (575) மதிப்பெண்), 2-ஆம் இடம் இசைவாணி (562),

3-ஆம் இடம் நஜிபா பேகம் (552) பெற்றனா். 500 மதிப்பெண்களுக்கு மேல் 58 மாணவா்கள் பெற்றுள்ளனா். விலங்கியலில் ஜோதி பூரணி, பவிசா நித்திலா, வணிகவியலில் ஜோதி, சந்தோஷ், கணக்குப்பதிவியலில் மாரியப்பன் ஆகியோா் நூற்றுக்கு நூறு

மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவா்களைப் பள்ளிச் செயலா் சங்கா், பள்ளி நிா்வாகக் குழுவினா், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ராகவன், தலைமை ஆசிரியா் பண்டாரசிவன், ஆசிரியா்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலக ஊழியா்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com