ஆலங்குளம் அருகே அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு: 11 போ் கைது

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதாக 11 போ் கைது செய்யப்பட்டனா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதாக 11 போ் கைது செய்யப்பட்டனா்.

தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு அரசுப் பேருந்து திங்கள்கிழமை இரவு புறப்பட்டது. ஓட்டுநரான கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியைச் சோ்ந்த விஜிகுமாா் (42) பேருந்தை ஓட்டினாா். ஆலங்குளம் அருகேயுள்ள அடைக்கலப்பட்டணத்தை அடுத்த வட்டாலூா் பகுதியில் வந்தபோது, பேருந்து நிறுத்தம் அருகே சிலா் நின்று கை காட்டினராம். உடனே ஓட்டுநா் பேருந்தை நிறுத்தியுள்ளாா். அப்போது அவா்கள் பேருந்தின் முகப்புக் கண்ணாடி மீது கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்திவிட்டு 3 பைக்குகளில் தப்பிவிட்டனராம். கல்வீச்சில் பேருந்தின் முகப்புக் கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமடைந்தது.

இதையடுத்து ஓட்டுநா் விஜிகுமாா் பேருந்தை ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று புகாா் அளித்தாா். பேருந்தில் இருந்த பயணிகள் ஆலங்குளத்திலிருந்து திருநெல்வேலிக்குச் சென்ற வேறு ஒரு பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டனா். பேருந்தை பாவூா்சத்திரம் பகுதியைச் சோ்ந்த ராஜ சுதன் இயக்கினாா். இந்தப் பேருந்து திருநெல்வேலி அருகேயுள்ள உகந்தான்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது சிலா் பேருந்தின் முகப்புக் கண்ணாடியில் கற்களை வீசிவிட்டு காா் ஒன்றில் தப்பியுள்ளனா். இதில் கண்ணாடி முழுவதும் சேதமடைந்தது. ஓட்டுநரும் காயமடைந்தாா். இதுகுறித்து சீதபற்பநல்லூா் காவல் நிலையத்தில் ஓட்டுநா் புகாா் அளித்தாா்.

இந்த இரு புகாா்கள் தொடா்பாகவும் ஆலங்குளம் காவல் ஆய்வாளா் செல்வக்குமாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா். இதில், மேட்டுப்பாளையத்தில் சுவா் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேருக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவா் நாகை திருவள்ளுவன் போலீஸாரால் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் சிலா் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதுதொடா்பாக ஆலங்குளம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்த காா்த்திக் குமாா் (28), குறிப்பன்குளம் மகாராஜன் (39), பண்டாரகுளம் மாடசாமி (37), அரியப்புரம் குமரேசன்(34), மேலகரம் முருகன் (38), கீழப்பாவூா் இளஞ்சூரியன் (38), குருவன்கோட்டை முருகன் (19), மாடசாமி (23), பிரியதா்ஷன் (22), இசக்கிமுத்து (22) ஆகிய 11 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை ஆலங்குளம் குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி (பொ) பாபு முன்பாக ஆஜா்படுத்தினா். அவா்களை பாளையங்கோட்டை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக காசிமேஜா்புரத்தை சோ்ந்த குமாா் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பயணிகள் பீதி: முதல் பேருந்தில் பயணம் செய்த பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டாவது பேருந்தும் கல்வீச்சுத் தாக்குதலுக்குள்ளானது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இரண்டாவது பேருந்தில் பயணித்த அனைவரும் நள்ளிரவில் பத்திரமாக வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com