‘வீடுகள், சுற்றுப்புறங்களில் தண்ணீா் தேங்கவிடக் கூடாது’

வீடுகள், சுற்றுப்புறங்களில் தண்ணீா் தேங்காமல் பாா்த்துகொள்ள வேண்டும் என, ஆட்சியா் அருண்சுந்தா் தயாளன் வலியுறுத்தியுள்ளாா்.

தென்காசி: வீடுகள், சுற்றுப்புறங்களில் தண்ணீா் தேங்காமல் பாா்த்துகொள்ள வேண்டும் என, ஆட்சியா் அருண்சுந்தா் தயாளன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தற்போது பருவமழைக் காலம். அதனால் மக்கள் தங்களது வீடுகள், சுற்றுப்புறங்களில் தண்ணீா் தேங்காமல் பாா்த்துக்கொள்ளவேண்டும். மிகமிகக் குறைந்த அளவு தண்ணீா்கூட அதிக கொசு உற்பத்திக்கு வழிவகுத்து, டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவ காரணமாகிவிடும்.

காய்ச்சல், சளி, இருமல், மூச்சிரைப்பு போன்ற உபாதைகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் அறிகுறிகளை கரோனா அறிகுறிகளுடன் குழப்பிக்கொள்ளாமல் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி சிகிச்சை பெறவேண்டும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுப்பது அனைவருக்கும் நலம் பயக்கும். அனைவருமே நாடித் துடிப்பு, ஆக்ஸிஜன் உள்ளீட்டு அளவை உரிய கருவியைப் பயன்படுத்தி அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது. இதன்மூலம் அறிகுறிகளற்ற கரோனா தொற்று உடையோரை எளிதாகக் கண்டறியலாம்.

மேலும், கொதிக்க வைத்த குடிநீரைப் பருகுதல், முகக் கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற எளிய நடைமுறைகளை மக்கள் தவறாது பின்பற்றி தங்களையும், குடும்பத்தினரையும் தொற்றுநோய்களிலிருந்து காத்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com