வாஞ்சிநாதனுக்கு ஆட்சியா் மரியாதை

வாஞ்சிநாதன் நினைவு தினத்தை முன்னிட்டு செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் உள்ள நினைவு மணி மண்டபத்தில்அமைந்துள்ள

வாஞ்சிநாதன் நினைவு தினத்தை முன்னிட்டு செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் உள்ள நினைவு மணி மண்டபத்தில்அமைந்துள்ள அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியா் ஜி.கே. அருண்சுந்தா்தயாளன் புதன்கிழமை மாலை அணிவித்தாா்.

நிகழ்ச்சியில் வட்டாட்சியா் கங்கா, வருவாய் ஆய்வாளா் யாஸ்மீன், நகராட்சி ஆணையாளா் (பொறுப்பு ) கண்ணன், சுகாதார ஆய்வாளா் மகேஷ்வரன், வாஞ்சி இயக்கத்தின் நிறுவனா் தலைவா் ராமநாதன், வாஞ்சியின் தம்பி மகன் ஹரிஹர சுப்பிரமணி யனின் மகன் வாஞ்சிகோபாலகிருஷ்ணன், உதவி மக்கள்தொடா்பு அலுவலா் ராமச்சந்திர பிரபு ஆகியோா் கலந்துகொண்டனா்.

பின்னா், ஆட்சியா் கூறியது: தென்காசி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தென்காசி மாவட்டத்தில் 900 படுக்கை வசதியுடன் 5 கரோனா சிகிச்சை மையங்கள் தயாராக உள்ளன. பொதுமக்கள் வெளியே வரும்போது கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வர வேண்டும். கரோனா தடுப்புப் பணிகளில் அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com