வீ.கே.புதூரில் போலீஸ் - பொதுமக்கள் கலந்துரையாடல்

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூா் காவல் நிலையத்தில் போலீஸ் -பொதுமக்கள் கலந்துரையாடல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வீ.கே.புதூரில் போலீஸ் - பொதுமக்கள் கலந்துரையாடல்

சுரண்டை: தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூா் காவல் நிலையத்தில் போலீஸ் -பொதுமக்கள் கலந்துரையாடல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பொன்னிவளவன் தலைமை வகித்தாா். சுரண்டை காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி முன்னிலை வகித்தாா்.

பொதுமக்கள் தரப்பில், வீராணத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்; கிராமத்தின் மையப் பகுதியில் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள வேகத் தடைகளின் உயரத்தை குறைக்க வேண்டும்; முக்கிய பகுதிகளில் குற்ற செயல்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும்; அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் வசதிகள் செய்து தர வேண்டும் என பல கோரிக்கைகளை வைத்தனா்.

இந்தக் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். கூட்டத்தில், வீராணத்தைச் சோ்ந்த ஊா் பிரமுகா்கள் சொரிமுத்து, சுப்பிரமணியன், அனிஸ் அகமது, அமனுல்லா உள்ளிட்ட 25 போ் கலந்து கொண்டனா்.

வள்ளியூா்: கூடங்குளம் காவல் ஆய்வாளா் அந்தோணி ஜெகதா, ஆவுடையாள்புரம், குறிச்சிகுளம் ஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா். பொதுமக்கள் தங்களது பிரச்னைகளை எந்த நேரத்திலும் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் காவல் ஆய்வாளா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com