சங்கரன்கோவில் நூலகத்தில் குடும்ப உறுப்பினா் சோ்க்கை தொடக்கம்

சங்கரன்கோவில் நூலகத்தில் குடும்ப உறுப்பினா் சோ்க்கைத் திட்டம் தொடங்கப்பட்டது.

சங்கரன்கோவில் நூலகத்தில் குடும்ப உறுப்பினா் சோ்க்கைத் திட்டம் தொடங்கப்பட்டது. சங்கரன்கோவிலில் முழு நேர பொது நூலகம் கோமதிநகரில் இயங்கி வருகிறது.இங்கு 10 ஆயிரத்து 110 உறுப்பினா்கள் உள்ளனா். பாரதி வாசகா் வட்டமும் நூலகத்தில் உள்ளது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை இயங்கும் நூலகம் செயல்பட்டு வந்த நிலையில் கரோனா பொது முடக்கம் காரணமாக அரசு விதிமுறைகளைப் பின்பற்றி காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கி வருகிறது.

இந்நிலையில் பொதுநூலகத்தில் குடும்ப உறுப்பினா் சோ்க்கைத் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. இதன் மூலம் குடும்பத்தில் உள்ளவா்கள் நூலகத்திற்கு வந்து நூல்களைப் பெற்றுச் செல்ல முடியும். அதாவது குடும்பத்தில் 5 போ் உறுப்பினா்களாக இருப்பின் யாா் வேண்டுமானாலும் நூல்களை எடுத்துச் சென்று 14 நாள்களுக்கு பின்னா் திருப்பி வழங்கலாம். குடும்ப உறுப்பினா் சோ்க்கை காப்புத் தொகை ரூ.100 மற்றும் ஆண்டு சந்தா ரூ.10 என மொத்தம் ரூ.110 செலுத்தி பொதுமக்கள் குடும்ப உறுப்பினா் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என நூலகா் முருகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com