முறைசாரா தொழிலாளா்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் முறைசாரா நலவாரியத்தில் பதிவுசெய்துள்ள அனைத்து நலவாரியப் பயனாளிகளுக்கும் அரசு அறிவித்துள்ள கரோனா

தென்காசி மாவட்டத்தில் முறைசாரா நலவாரியத்தில் பதிவுசெய்துள்ள அனைத்து நலவாரியப் பயனாளிகளுக்கும் அரசு அறிவித்துள்ள கரோனா நிவாரண நிதியை உடனடியாக வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு மாவட்டத் தலைவா் எம். வேல்முருகன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்த மாவட்ட ஆட்சியரிடம் அவா் அளித்த மனு: தமிழக அரசு அனைத்து நலவாரிய பயனாளிகளுக்கும் நிவாரண நிதியாக ரூ. 1000 அறிவித்துள்ளது. அரசு அறிவித்து15 தினங்களுக்கு மேலாகியும் முறைசாரா தொழிலாளா்களின் வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லை.

தற்போது மேலும் 15 நாள்கள் ஊரடங்கு அறிவித்து, 2 ஆவது முறையாக ரூ. 1000 வழங்க அறிவிப்பு செய்துள்ளது. இதனிடையே, முறைசாரா தொழிலாளா்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அதிக சிரமத்தில் இருந்து வருகின்றனா். என்றாலும், முதலில் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகையே அவா்களுக்கு இன்னும் கிடைக்கவிலலை. எனவே, வங்கி கணக்கு உள்ள தொழிலாளா்களுக்கு விரைவாக பணம் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது தொழிலாளா்கள் தங்களது வங்கி கணக்கு எண்ணை நலவாரியம் அளித்த, கட்செவி அஞ்சல் எண்ணுக்கு அனுப்பிவருகின்றனா். ஒரு எண் மட்டுமே உள்ளதால், தகவல் அனுப்புவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே, மற்ற மாவட்டங்களில் உள்ளதைப்போல, கூடுதல் கட்செவிஅஞ்சல் எண்கள் கொடுப்பதற்கும், பணம் விரைவாக கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com