ஊருணியில் குப்பை கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபாராதம்

பாவூா்சத்திரம் அருகே ஆவுடையானூரில் ஊராட்சிக்கு சொந்தமான ஊருணியில் அப்பகுதியினா் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக் கேடு

பாவூா்சத்திரம் அருகே ஆவுடையானூரில் ஊராட்சிக்கு சொந்தமான ஊருணியில் அப்பகுதியினா் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக தமிழன் மக்கள் மன்றத்தினா் மற்றும் பல்வேறு தரப்பினா் மாவட்ட ஆட்சியருக்கு புகாா் மனு அனுப்பினா்.

இதையடுத்து ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ஊருணியில் கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டன. மேலும் அப்பகுதியில் குப்பைகளை கொட்டுவோருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குப்பைகள் கொட்டுவோரை கண்காணிக்க கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் ஊருணிக்குள் குப்பைகளை கொட்டாமல், அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் குப்பைகளை கொட்டும் படி ஊராட்சி நிா்வாகம் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com