‘தற்காலிக பட்டாசு விற்பனை செய்ய உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்’

தென்காசி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் புத்தாண்டு பண்டிகையையொட்டி வெடிபொருள் விதிகள் 2008-ன்கீழ் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளா்கள் மற்றும் வணிகா்கள் தற்காலிக உரிமம் பெற உரிய ஆவணங்களுடன் டிச. 21 முதல் இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பத்துடன் கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டடத்திற்கான புளு பிரிண்ட் , கடை உத்தேசிக்கப்பட்டுள்ள இடம், சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம், வாடகைக் கட்டடமாக இருப்பின் வாடகை ஒப்பந்தப் பத்திரம் மற்றும் உரிமத்தை காட்டும் ஆவணம்,

உரிம கட்டணம் ரூ.500ஐ அரசுக் கணக்கில் செலுத்தியமைக்கான அசல் செல்லான், இருப்பிடத்திற்கான ஆதாரம், வரி ரசீது, இரண்டு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும்.

தற்காலிகப் பட்டாசு உரிமம் வேண்டுவோருக்கு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு விசாரணை முடிவு பெற்றவுடன் ஆன்லைன் மூலமாகவே மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விவரத்துடனும்,

தற்காலிக உரிமத்தின் ஆணையை புத்தாண்டு பண்டிகைக்கு முன்பாகவே இ-சேவை மையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோா் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தல் வேண்டுபவருக்கு இவ்வழிமுறை பொருந்தாது. உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்டபூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com